Thursday, June 04, 2009

ஓல்ட் இஸ் கோல்ட்!

அப்பாடா! தமிழ்-ல ஒரு பதிவு போடுறேன் ரொம்ப நாளைக்கு பிறகு!!!!
சில-பல பேருக்கு சந்தோஷமா இருந்தாலும் தப்பு நிறைய இருக்க வாய்ப்பு இருக்கு. பொது மன்னிப்பு மொதல்லையே கேட்கறேன்!

எனக்கு பாட்டு கேட்கறது, பாடறது இரண்டுமே ரொம்ப பிடிக்கும். [பாவம் கேட்கறவங்க தான்....!!! அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! ]. அபூர்வ ராகங்கள் படத்தில ஒரு பாட்டு கேட்டன்! சூப்பர்! நல்ல அர்த்தமுள்ள பாட்டு. ஹுஉம் இப்போவெல்லாம் பாட்டுல வரி இருக்கான்னு கண்டுபிடிக்க வேண்டி இருக்கு! என்ன பண்றது!

பாட்டோட வரிகள் தேடினேன். கூகிள் கைகொடுக்கல! அதனால என்ன நாமே பதிச்சிடலம்னு தோணிச்சு! [அவ்வளவு வெட்டியா இருக்கேன்!] அதான் உடனே [ஹி ஹி யூடுப்-ல பாட்ட கேட்டு/பார்த்து வரிகள் எழுதிட்டேன் ஆனா பதிவு போடத்தான் லேட் ஆகிடுச்சு!!!] போட்டுட்டேன்! இதோ அதன் வரிகள். வரிகளின் அர்த்தத்தை உணர்க!

மூணாவது சரணம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு

பல்லவி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

சரணம்

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்
(ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.....)

சரணம்

எனக்காக நீ அழுதல் இயற்கையில் நடக்கும் - நீ
எனக்காக உணவு உன்ன எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
(ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்....)

சரணம்

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்து நடக்கும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்து என்ன லாபம் - அதில்
பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்
(ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்....)
சரணம்

நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தை போல
(ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...)

ஏதோ என்னால் முடிந்தது!

பி.கு :
மெய் தந்தவர் [இசை] : விஸ்வநாதன்
உயிர் தந்தவர் [பாடலாசிரியர்] : கண்ணதாசன் []
உயிர்மெய்யாய் உலகுக்கு தந்தவர் [பாடியவர்] : வாணி ஜெயராம். அவங்களுக்கு அவார்டு வாங்கி தந்த பாட்டு.

6 comments:

- யெஸ்.பாலபாரதி said...

எனக்கும் கூட இந்த பாடல் பிடித்ததுதான்..!

இப்படியான வேலைகளுக்கு நடுவே.. படித்த நூல்கள் குறித்தும், அது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் கூட எழுதலாமே! :)

deeps said...

hmm ... madam kalakureenga. aamaam unga kathai ellaam enna aachu athayum post pannalaamae.

Anonymous said...

this is one of my favourite song too and tamil la blog ezhutharthu nalla iruku.. gud work...

நாமக்கல் சிபி said...

Have You ever visited

http://thenkinnam.blogspot.com

Unknown said...

inimiyanavarigal thedi kandupidithu irukkaringa vaalthukkal

Surendhar said...

பாடல் - காதுக்கு இதமா, மனசுக்கு நெருக்கமா இருக்கு.