"கடல் அழகா இல்ல?" என்ற குரல் கேட்டதும் தூக்கத்திலிருந்து விழித்தவள் போல்
"என்ன?" என்றாள் சுமா.
"இல்லை சுமா கடல் அழகா இல்ல?"
"ம் அழகா இருக்கு" என்று சலிப்புடன் சொன்னாள் சுமா.
"என்ன சுமா இப்படி சோகமா இருக்க?"
"இல்ல சுமன் எனக்கு பயமா இருக்கு" என்றாள்.
"என்ன ஆச்சு இப்போ பயப்படறத்துக்கு" என்று சற்று அதட்டலாக கேட்டான்.
"இல்ல சுமன் வீட்ல யாருக்கும் தெரியாம நாம பீச்சுக்கு வந்தது தப்புடா நீ சொன்னாலும் நான் வந்திருக்ககூடாது" என்றாள் பனிவாக.
"உன்ன திருத்தவே முடியாது எப்பப்பாரு பயம்" என்று அலுத்துக்கொண்டான் சுமன்.
"என்ன சுமன் நீயே இப்படி கேட்கற?"
"இல்ல சுமா நானும் தான் வீட்டிற்கு சொல்லாமல் வந்திருக்கேன். வந்த இடத்துல பீச்ச என்ஜாய் பன்றத விட்டுட்டு சும்மா பயந்துக்கிட்டு இருந்தா போர் அடிக்காது" என்று சொல்லிவிட்டு அவளை பார்க்க முடியாமல் தலை குனிந்தான்.
"நீ தைரியசாலி தான் ஒத்துக்கரேன் இது நம்ம வீட்ல தெரிஞ்சா தெரியும் சேதி. சரி இருட்டிகிட்டு வருது வா போகலாம்" என்று சொல்லிக்கொண்டே தங்கள் பிஞ்சு பாதங்கள் மனலில் பதிக்க நடந்தனர் 12 - வயதான் சுமாவும் அவள் அண்ணன் 14 - வயதான சுமனும்
Thursday, October 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்லா வந்திருக்கு, கொஞ்சம் பத்தி பிரித்து, எழுதினால் இன்னும் நல்லா இருக்கும்.
:-)
பாத்திரங்களின் பெயர்களைப் பார்த்ததுமே புரிந்து போயிற்று. இவர்கள் உடன் பிறப்புகளாகத்தான் இருப்பார்கள் என்று.., இன்னும் கொஞ்சம் யோசித்து எழுதி இருந்தால்.. சிறப்பாக வந்திருக்கலாம்.
Cool!!!
Nice stories and poems!! Surprised to read some beautiful short stories in your blog. Why can't you try writing in magazines like vikatan and Kumudam? Do write more.
(BTW got his link from your Orkut profile!!)
Post a Comment