Monday, October 16, 2006

பசுங்கனிகள்




'க்ளுக்' எனச் சிரித்தாள் நெற்கதிர்களின் அரசி!
அவையோரின் மௌனத்தைக் கலைக்க முயன்று
முன்வரிசையில் நின்ற முதிர்கன்னி ஒருத்தி
ஒழுக்கத்தைப்பற்றி விளக்கமாக உரைக்க,
உரலின் இடையென நினைப்பது போல்
பொலிவுடன் தலையசைத்தன மற்ற மணிகள்;

மண்ணின் நடுவே ஊடுறுவிக் கொண்டு
கொள்ளையிட வந்த கொடும்பாவியை நினையாமல்,
நாணிக் குனிந்தன நட்டுவனாரின் செயலிலே!!

செல்லரிக்கப் பட எடுத்துக்கொண்ட நேரமோ
நிமிடத்தினும் குறைவு வினாடியினும் சிறிது!

சின்னப் புழுவின் உற்சாக விருந்தில்
விரைப்பாக வளர்ந்து வளிப்பாக வாழ்ந்து
விண்ணை நோக்காமல் மண்ணில் புதைந்து
பூமித்தாயின் திருவடிகளில் தஞ்சம் புகுந்தன
பசிதீர்க்கும் பசுங்கனிகள் !!!

No comments: