அந்த இளைஞன் சதா அவள் மேல் இடித்துக் கொண்டே இருந்தான். பேருந்து என்றாலே இப்படித்தான். அதுவும் பல்லவன் கழகம் என்றால் சொல்லவா வேண்டும். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
இப்படி நடப்பதும் ஒரு பிழைப்பா என்று எண்ணிக் கொண்டேன். பேருந்தில் பயணம் செல்லும் எந்த பெண்ணுக்கும் இந்த நிலைமை தான் என்பது எனக்கு நன்கு தெரியும்.
'என்ன செய்வது பொறுத்துத்தான் போக வேண்டும் பெண்ணாகப் பிறந்துவிட்டோமே!' என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.
நான் மட்டும் என்ன விதிவிலக்கா? அப்படித்தான் நானும் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பேன் ஆனால் அன்று மனம் கேட்கவில்லை
'இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படிக் கழிப்பது? பெண்கள் என்றாலே இதுதான் கதியா?? ' கொதித்தது என் மனம் எழுந்து நாலு அரை கொடுத்து விடலாமோ என நினைத்தேன்.
பின் விளைவுகளை பற்றிய பயம் எனக்கு இருந்தாலும் அன்றுமட்டும் என்னால் சும்மா இருக்கமுடியவில்லை எழுந்தேன்.
"ஏன்யா நீங்க அக்கா தங்கச்சியோட பொறக்கல! இப்படி படுத்தறீங்க அந்த பொண்ண. கேட்க ஆளில்லை என்ற திமிரா?" என்றேன் சற்று அதட்டலாக.
உடனே அவனிடமிருந்து வந்த பதில் என்னை அதிர்த்தது. அவை
"ஏன் நாத்தியப்பார்க்க இவ்வளவு இஷ்டமா? சொன்னா கூட்டியாந்திருப்பேனே".
இது என் ஆழ்மனதை பாதித்தது. நான் வெலவெலத்துப் போனேன். பேருந்தே என்னைப் பார்த்தது நான் அமைதியானேன்.
நிருத்தம் வந்ததும் நானும் அந்த பெண்ணும் இறங்கினோம். அந்தப் பெண் என்னிடம் வந்து
"ஏம்மா அவனுங்ககிட்ட போய் வாய்க்கொடுக்கரீங்க அதுங்க எல்லாம் திருந்தா ஜென்மங்க. விட்டுத்தள்ளுங்க இப்படி உரசிப்பார்ப்பதில் என்ன பெரிய சந்தோஷமோ!! செவிடன் காதுல சங்கூதி என்ன பயன். இப்ப சொல்லறேன், நானும் ஒரு போலீஸ்காரன் பொண்ணுதான் இவனுங்கள என்ன செய்ய முடியும் எல்லாம் விதி. எப்படியும் நீங்க செய்த ஹெல்பிற்கு ரொம்ப நன்றிங்க. இனிமே இவனுங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க. நான் வரேன்" என்று அவன் சொல்லிப்போனதை திடுக்கிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
Saturday, September 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment