"வா வஸந்த் வா, உள்ளவா",
சுமதி இவ்வாறு அழைப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவளை அவன் நண்பனுடன் மணக்கோலத்தில் பார்த்த போது கூட இவ்வளவு அதிர்ச்சி அவன் அடையவில்லை.
"என்ன வஸந்த் ஏன் வெளியே நிற்கிறாய்?" என்று அவள் குரல் உள்ளிருந்து கனீரென்று கேட்க அவன் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டவனாக உள்ளே சென்றான்.
"வந்து ..." வார்த்தைகள் வர மறுத்தன.
"நான் அசோக்கை பார்க்க வந்தேன், அவன் இல்லை?" என்றான்.
உண்மையில் அதுவல்ல காரணம் என்பது அவளுக்குத் தெரியும் என்பது அவனுக்குத் தெரியாது.
"இப்போதான் கிளம்பி வெளியே போனார் இதோ வந்துருவார் நீ உட்கார் என்ன சாப்படரே டீ ஆர் காபி" என்றாள்.
நான் கிளம்பறேன் என்று எழுந்தான். அப்போது தான் அது நடந்தது.
அவள் "வஸந்த்" என்றபடி அவனுடைய மார்ப்பில் சாய்ந்து கொண்டாள். அவள் கண்களில் இருந்து வந்த துளிகள் அவன் மார்பை நனைத்தது. அவள் முகத்தை கைகளில் ஏந்தினான். இந்த அழகு முகத்தை எவ்வளவு வருடங்கள் ரசித்திருப்பான்!
"இந்தா காபி" என்ற அவள் குரல் அவனை எழுப்பியது.
"சீ கனவா?" என்று அவன் கூறியது அவள் காதுகளில் விழுந்தது.
"நானே உன்கிட்ட பேசனும்னு இருந்தேன். நீ என்னை பார்க்கத்தான் வந்தேன்னு எனக்குத் தெரியும். நான் என் பழைய வாழ்க்கையை மறந்துட்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டு இருக்கேன். அதனால் இனிமே நீ இங்கே வராதே. என்ன மறந்திடு, மன்னிச்சிடு"
என்று அவள் சொல்லும் பொழுதே அதற்குமேல் வார்த்தை வர இயலாமல் அழுதே விட்டாள்.
அவளுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாத பொழுதும் தான் நினைத்து வந்ததையே அவள் கூறியதை கேட்டு அவனுக்கு மெய் சிலிர்த்தது.
தான் இனிமேலும் அங்கு போகத்தேவையில்லை என்று நினைத்துக்கொண்டே, தன் தந்தையை எதிர்க்கத் துணிவில்லாமல், தன் தங்கையின் திருமணத்தை ஆதரிக்க முடியாத நிலையில் அவளின் தற்போதைய வாழ்க்கைக் காணக்கூட, யாருக்கும் தெரியாமல் வந்த வஸந்த், அவள் நன்றாக இருந்தாலே போதும், என்று ஆண்டவனை வேண்டிக்கொண்டே, அவளின் துனிவு இவனுக்கு வருமா?! என்று வியந்தவாறு தலை குனிந்து யாரும் பார்த்துவிடுவாரோ என்ற பயத்துடன் சென்றான்.
Tuesday, September 26, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment