Saturday, September 23, 2006

கனவின் இனிமை

காலை மனி 10. ஆண்டவனை வேண்டிக்கொண்டு கொடுக்கப்பட்ட வினாத்தாளை பிரித்தேன்.

"Thank God" கிட்டத்தட்ட கத்தியே விட்டேன்.

மேற்பார்வை பார்க்க வந்தவர் "என்ன?" என்றார்.

அனைவருடைய கண்களும் என் மேல். சற்று வெட்கப்பட்டுக்கொண்டே

"ஒன்னுமில்லை!" என்றேன்.

பத்து மதிப்பெண்கள் தரப்படும் 10 கேள்விகளுக்கு வேகமாக பதில் எழுத ஆரம்பித்தேன். அரை மணி நேரம். அட ! என்னால் நம்ப முடியவில்லை. பின் சரசரவென அனைத்தையும் முடித்துவிட்டு மணியை பார்த்தேன். இன்னும் அரை மணி நேரம் இருந்தது.

நிதானமாக தாளை சரி பார்த்தேன் okay என்று தோன்றியது. தாளை கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். கீழே என் நண்பர்கள். ஒரு மதிப்பெண் விடைகளை சரி பார்த்தேன். அனைத்து விடைகளும் சரியாக எழுதியிருந்தேன். அட என்ன இது?

'நீ தேரப்போவதில்லை என்ற சொற்கள் பல என் காதுகளில் விழுந்தது தேர்வுக்கு முன்னால்! என்னால் கூட எழுத முடியும் நிச்சியமாக முடியும், இதை நான் நிரூபனம் செய்து இருக்கிறேன்'.

"ராகுல்! டேய் ராகுல்! எழுந்திருடா எருமைமாடு" அப்பாவின் குரல் பள்ளியில்? சற்று நேரத்தில் நீர் துளிகள் என் முகத்தில்; துடைத்துக் கொண்டு எழுந்தேன்.

'என்ன ஒரு கனவு?' என்று நினைத்தேன்.

கனவைப் பற்றி வெளியே சொல்ல முடியவில்லை. சொன்னால் இன்னும் சேர்த்து வைத்து திட்டுவார்கள் என்று அலுத்துக் கொண்டே குளியலறை நோக்கி தளிர் நடை போட்ட படி சென்றான் மார்ச் தேராமல் அக்டோபரிலாவது பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதி கொண்டு வேதனையின் விலும்பில் நின்றிருந்த ராகுல்....

3 comments:

பொன்ஸ்~~Poorna said...

நல்லாருக்கு மேடம்.. கொஞ்சம் தமிழ் தப்பில்லாமல் எழுதுங்களேன் பார்ப்போம்..

Anonymous said...

krithiks dreams nale oru thrill than... since v feel very happy while dreaming..

Anonymous said...

hi krithiks love dreams... ana i will not dream that much.. but am happy while dreaming...